சுடச்சுட

  

  ஜயங்கொண்டம் அருகேயுள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   மாவட்ட காவல் துறை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் ஆர். ராஜமாணிக்கம், ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் நாகராஜ், இளங்கோவன் ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து பேசினர்.
   விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் பேசியது: சாலை பாதுகாப்பு வார விழாவின் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விபத்து எந்த நேரத்திலும் ஏற்படலாம். விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுவதுதான் நமக்கு பாதுகாப்பு.
   இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
   விழாவில் விபத்தில்லாமல் பேருந்து ஓட்டிய கல்லூரிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
   முன்னதாக, கல்லூரித் தாளாளர் எம்.ஆர். ரகுநாதன் வரவேற்றார். முதல்வர் தங்க. பிச்சையப்பா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai