சுடச்சுட

    

    மயக்க குளிர்பானம் கொடுத்து பெண்ணிடம் நகை திருட்டு

    By  ஜயங்கொண்டம்  |   Published on : 05th January 2013 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜயங்கொண்டம் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து 2 பவுன் நகையை திருடிச் சென்ற இரண்டு பெண்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
     ஜயங்கொண்டம் அருகேயுள்ள இரும்புலிக்குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த சின்னதம்பி மனைவி பெரியபிள்ளை (55). இவர் வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ஜயங்கொண்டம் கடைவீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் துணிகள் வாங்கி விட்டு, பேருந்து நிலையத்துக்கு வந்து இரும்புலிக்குறிச்சி செல்லும் பேருந்தில் உட்கார்ந்திருந்தாராம். அப்போது, அந்தப் பேருந்தில் ஏறிய இரண்டு பெண்கள் பெரியபிள்ளையிடம் பேச்சு கொடுத்தனராம். பின்னர், அவர்கள் வைத்திருந்த குளிர்பானத்தை பெரியபிள்ளையை அருந்துமாறு கூறினராம். அதை அருந்திய சிறிது நேரத்தில் பெரியபிள்ளைக்கு மயக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
     மயக்கத்தில் இருந்த அவரை யார் வீட்டில் கொண்டு வந்து விட்டது என்பது தெரியவில்லையாம்.
     நீண்ட நேர மயக்கத்தில் இருந்த அவரை உறவினர்கள் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, 2 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு போனது தெரியவந்தது.
     இதுகுறித்து ஜயங்கொண்டம் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai