சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஊராட்சி ஒன்றியம், சிந்தாமணி ஊராட்சி அலுவலகத்துக்குப் பூட்டு போட்டு ஊராட்சி உறுப்பினர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   சிந்தாமணி ஊராட்சியில் கடந்த ஓராண்டாக முறையாக உறுப்பினர்களிடம் வரவு- செலவு கணக்குகள் குறித்தும், கூட்டம் நடத்துவது குறித்தும் உறுப்பினர்களுக்கு முறையாகத் தெரிவிப்பதில்லையாம்.
   இந்நிலையில் திங்கள்கிழமை நடக்கவிருந்த கூட்டத்தில் பங்கேற்க ஊராட்சித் துணைத் தலைவர் ராமச்சந்திரன், உறுப்பினர்கள் வசந்தா, ஜெசிந்தாலூர்துமேரி, சண்முகம், சேகர் ஆகியோர் வந்தபோது அலுவலகம் பூட்டியிருந்தது. இதனால் அவர்கள் காத்திருந்தபோது ஊராட்சி செயலர் சசிகுமார் வந்து அலுவலகத்தை திறந்தார். அவரிடம் ஊராட்சித் தலைவர் முருகவேல் வராதது குறித்துக் கேட்டதற்கு, தலைவருக்கு வேறு வேலை இருப்பதால் கூட்டம் நடைபெறாது, அவரை வரவழைக்க முடியாது என அவர் கூறினாராம். இதையடுத்து உறுப்பினர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பூட்டைப் போட்டு அலுவலகத்தை பூட்டி வெளியில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
   தகவலறிந்த தா. பழூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்க்கண்ணன், சம்பத், காவல் ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக வரவு- செலவு கணக்கு காண்பிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததையடுத்து அலுவலகத்தை அவர்கள் திறந்து விட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai