சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே திங்கள்கிழமை இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
     ஜயங்கொண்டம் அருகேயுள்ள அழிசுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் விஜி (21), ஐடிஐ படித்துவிட்டு வீட்டில் இருந்த இவருக்கு அடிக்கடி வலிப்பு வருமாம்.
     இதனால் மனம் உடைந்த அவர், உடையார்பாளையத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த வாடகை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai