Enable Javscript for better performance
நகை திருடியதாக பெண் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உறவினர் வீடுகளில் நகை திருடிய பெண்ணை ஆண்டிமடம் போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
     ஜயங்கொண்டம் அருகேயுள்ள ஆண்டிமடம் விளந்தை காலனித் தெருவைச் சேர்ந்த த. காமராஜ் வீட்டில் கடந்த 25.7.2012-ல் 5.5 பவுன் நகையும், 12.9.2012-ல் அதே தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் வீரமணி வீட்டில் 6.5 பவுனும், 15.11.2012-ல் மோகன்ராஜ் மனைவி பிரேமாவதி வீட்டில் 3.25 பவுனும், 3.1.2013-ல் செல்வராஜ் மனைவி ஜெயந்தி வீட்டில் 1.5 பவுன் நகையும், தங்கராசு மகன் குமார் என்கிற கண்ணன் வீட்டில் 3.5 பவுன் நகைகளும் திருடு போயின.
     இந்த வழக்குகள் குறித்து ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் கோடீஸ்வரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் காமிலாபானு ஆகியோர் விசாரித்து வந்தனர்.
     அப்போது திலகர் நகரைச் சேர்ந்த லோகநாதன் மனைவி மாலதி (27) மேற்கண்ட திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்து அவரைத் தேடினர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாலதியை கைது செய்து அவரிடமிருந்து 21 பவுன் நகைகளை மீட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai