சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் த. சோழங்குறிச்சி கிராமத்தில் 642 பேருக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
   அரியலூர் மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார் தலைமை வகித்தார். ஜயங்கொண்டம் ஒன்றியக் குழுத் தலைவர் கண்ணகி குப்புசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   விலையில்லாப் பொருள்களை வழங்கி ஆட்சியர் ப. செந்தில்குமார் பேசியது:
   ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 14 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் சோழங்குறிச்சிக்கு குடிநீர் தட்டுபாடின்றி வழங்கப்படும்.
   சோழங்குறிச்சி- காடுவெட்டாங்குறிச்சி இடையே தார்ச் சாலை போடப்படும். 20 பேர் கொண்ட மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் வரை கடன், தொழில் தொடங்கப் பயிற்சி, தொழில்நுட்ப உதவி அளிக்கப்படும்.
   இக்கிராமத்தில் 100 பேருக்கு மேல் வீட்டுமனை இல்லை. அவர்களுக்கு இலவசமாக வீட்டு மனைகளை வழங்க தங்கள் நிலத்தை விற்க யாராவது முன்வந்தால், அதை வாங்கி உடனடியாக அனைவருக்கும் வீட்டு மனைகள் வழங்கப்படும் என்றார் அவர்.
   விழாவில் அரியலூர் கோட்டாட்சியர் கணபதி, அரியலூர் வட்டாட்சியர் பாலாஜி, ஜயங்கொண்டம் வட்டாட்சியர் சீனிவாசன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வடமலை, பாலச்சந்தர், ஊராட்சித் தலைவர் ராமதாஸ், அரியலூர் மாவட்ட அதிமுக துணைச் செயலர் தங்க. பிச்சைமுத்து, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   சிறப்பு அமலாக்கத் திட்டத் துணை ஆட்சியர் ஸ்ரீதரன் வரவேற்றார். கோட்டாட்சியர் கஸ்தூரி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai