சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

  அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கோவிலூர் வடக்கு தெருவில் அனுமதியின்றி மது விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சம்பந்தம் (55), அரியலூர் வண்ணாங்குட்டை பகுதியில் மது விற்பனை செய்த அரியலூர் புது மார்க்கெட் தெருவை சேர்ந்த சரவணன் (30), ஜயங்கொண்டம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் மேற்கொண்ட சோதனையில் காமரசவல்லியில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக கதிரவன் (41), மீன்சுருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ஆதனக்குறிச்சி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த ஆதனக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்த வெண்மதி (45), ஆண்டிமடம் விளந்தை மதுபானக்கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த விளந்தை அதியமான் தெருவை சேர்ந்த ஜெயராமன் (55) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, அவர்களிடமிருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai