Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டத்தில் 4,56,986 வாக்காளர்கள் உள்ளனர்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளில் 4,56,986 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் ப.செந்தில்குமார்.

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கபட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வியாழக்கிழமை வெளியிட்ட ஆட்சியர் மேலும் கூறியது:

    அரியலூர் சட்டப்பேரவை தொகுதியில் 1,14,658 ஆண் வாக்காளர்களும், 1,14,965 பெண் வாக்காளர்களும் என 2,29,623 வாக்காளர்களும், ஜயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதியில் 1,14,009 ஆண் வாக்காளர்களும், 1,13,354 பெண் வாக்காளர்களும் என 2,27,363 வாக்காளர்கள் உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 2,28,667 ஆண் வாக்காளர்களும், 2,28,319 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4,56,986 வாக்காளர்கள் உள்ளனர்.

      வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக 1.10.2012 முதல் 20.11.2012 வரை நடைபெற்ற பணியில் அரியலூர் தொகுதியில் பெயர் சேர்க்கக்கோரி பெறப்பட்ட 8,419 விண்ணப்பங்களில் 8,261 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 158 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல, ஜயங்கொண்டம் தொகுதியில்  பெயர் சேர்க்கக்கோரி பெறப்பட்ட 9,507 விண்ணப்பங்களில், 9,277 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 230 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், வாக்காளர் பட்டியலிருந்து பெயரை நீக்க கோரி இரண்டு தொகுதிகளிலும் பெறப்பட்ட 240 விண்ணப்பங்களில் 239 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 1 விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. இறப்பு, குடியிருப்பு மாற்றம் மற்றும் இரட்டை பதிவு போன்ற காரணங்களால் அரியலூர் தொகுதியில் 7,886 வாக்காளர்களையும், ஜயங்கொண்டம் தொகுதியில் 5,674 வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

       தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி விண்ணப்பித்த தகுதியான நபர்களில் 19 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயது பூர்த்தி அடையவுள்ள நபர்களுக்கும் தேசிய வாக்களர் தினமான ஜன. 25ம் தேதி சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் அடையாள அட்டைகள் வழங்கப்படும். எனவே, புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் சம்மந்தப்பட்ட வாக்குசாவடி மையத்தில், தங்களது வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.  

       இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முனுசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் கணபதி (அரியலூர்), கஸ்தூரி (உடையார்பாளையம்), வட்டாட்சியர்கள் ராமன் (தேர்தல் பிரிவு), பாலாஜி (அரியலூர்), சீனிவாசன் (ஜயங்கொண்டம்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai