சுடச்சுட

    

    எம்.ஆர். கல்லூரியில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி

    By dn  |   Published on : 12th January 2013 11:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள மீனாட்சி ராமசாமி கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வியாழகிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

     இப்பயிற்சிக்கு மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தங்க பிச்சையப்பா தலைமை வகித்தார். கல்லூரி இயக்குனர் ஆர்.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார்.

     பயிற்சியில் சென்னை ரேடியன் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குனர் ஆர்.ராஜபூபதி பங்கேற்று பயிற்சியளித்தார். தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.  இப்பயிற்சியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதவுள்ள எம்.ஆர் கல்லூரி மாணவர்கள் 300 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்ப்பாடுகளை பேராசிரியர்கள் பாபு, இளங்கோமணி ஆகியோர் செய்திருந்தனர்.

     முன்னதாக கல்லூரி தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் வரவேற்றார். பேராசிரியர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai