சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் நிலக்கரி மின்திட்டத்தை துவக்ககோரி உண்ணாவிரத போராட்டம்

    By dn  |   Published on : 12th January 2013 11:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் நிலககரி மின் திட்டத்தை உடனே துவங்ககோரி நிலக்கரி மின்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வியாழகிழமை செங்குந்தபுரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     ஜயங்கொண்டம் நிலக்கரி மின்திட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 18 கிராமங்களில் நிலங்கள் மற்றும் வீடுகள் கைகப்படுத்தப்பட்டு 21 ஆண்டுகளுக்கு மேலாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தை உடனே துவங்கவேண்டும் அல்லது நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும். மேலும் இத்திட்டம் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், இத்திட்டத்தால் நிலமிழக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனக்கோரியும், திட்டத்தால் வீடு நிலங்களை இவக்கும் மக்களுக்கு கல்வி, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய குடியிருப்பு வசதி செய்து கொடுக்க வேண்டும் எனக்கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது.

     போராட்டத்திற்கு புதுகுடி விஸ்வநாதன் தலைமை வகித்தார், அ.பஞ்சநாதன், ரா.சின்னதுரை, மேலூர் முருகன், வழக்குரைஞர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் நீதிக்கட்சி நிறுவனர் சுபா.இளவரசன் துவக்கி வைத்து பேசினார்.

     இதில் சா.சேகர், சீ.பாலுசாமி, து.ராஜீவ்காந்தி, ம.பாஸ்கர், கோ.மகாராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ந.பாலுசாமி வரவேற்றார். சீ.சின்னப்பா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai