சுடச்சுட

  

  பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஐஜேகே ஆர்ப்பாட்டம்

  By dn  |   Published on : 12th January 2013 11:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட மகளிர் அணி சார்பில் வெள்ளிக்கிழமைகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அரியலூர் மேற்கு மாவட்ட மகளிரணி செயலர் பி.பச்சையம்மாள் தலைமை வகித்தார்.  நகர மகளிரணி செயலர் டி.மாலதி, துணை செயலர் டி.கோல்டா மேயர், அரியலூர் ஒன்றிய மகளிரணி செயலர் ஏ.சுதா, செந்துறை ஒன்றிய மகளிரணி செயலர் சாந்தி சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     டாக்டர் பாரிவேந்தர் பேரவை மாநில அமைப்பாளரும், இந்திய ஜனநாயக கட்சி மேற்கு மாவட்ட தலைவருமான சி.பாஸ்கர் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். 

      ஆர்ப்பாட்டத்தில், அரியலூர் மேற்கு மாவட்ட செயலர் டி.ஷாஜஹான், மாவட்ட பொருளாளர் கே.அழகமுத்து, மேற்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலர் வி.சின்னப்பன், மேற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் அழகு.சங்கர், அரியலூர் ஒன்றிய தலைவர் மு.கோவிந்தராசு, துணை செயலர் சி.வேலுமணி, அரியலூர் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் டி.சுமதி, துணை செயலர் கே.மலர்கொடி, மகளிரணி பொருளாளர் கே.வீரம்மாள், திருமானூர் ஒன்றிய தலைவர் சி.ஆனந்தகிருஷ்ணன், ஒன்றிய செயலர் எஸ்.சாந்தகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai