சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல்விழா வெள்ளிகிழமை நடைபெற்றது.

   இவ்விழாவில் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் அவர்களின் ஆசிரியர்ளின் உதவியோடு தனித்தனியாக 55 பானைகள் வைத்து பொங்கலிட்டனர். அப்பானைகளை ஒரு இடத்தில் ஒன்றாக வைத்து பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கிராமிய நடனங்கள் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். மேலும் விழாவில் பானை உடைத்தல், கயறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

   முடிவில் மாணவர்களுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டன.  விழாவில் பள்ளி முதல்வர் ஜான்பிரிட்டோ, துணை முதல்வர் பாக்கியலட்சுமி மற்றும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

   இதேபோல்  அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளி தாளாளர் த.முத்துகுமரன், செயலர் வேல்முருகன்,  முதல்வர் பரமசிவம், திருவள்ளுவர் ஞானமன்ற நிறுவனர் சி.பன்னீர்செல்வம் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர்களுக்கு பொங்கல் கரும்பு வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai