அரியலூரில் 300 பேருக்கு திருமண நிதியுதவி
By அரியலூர் | Published on : 13th January 2013 09:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், சமூக
நலத் துறை சார்பில் ஏழை, எளிய பெண்களுக்கு மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண
நிதியுதவித் திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில்
நடைபெற்றது.
விழாவில், 260 பயனாளிகளுக்கு தாலிக்கு தலா 4 கிராம் தங்கம், ரூ. 77.75
லட்சத்தில் திருமண உதவித் தொகைக்கான காசோலைகள், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு
விதவைகள் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 40 பேருக்கு தாலிக்கு தலா 4 கிராம்
தங்கம், ரூ. 12 லட்சத்தில் திருமண உதவித் தொகைக்கான காசோலைகள் என மொத்தம் 300
பயனாளிகளுக்கு 1200 கிராம் தங்கம், திருமண நிதியுதவியாக ரூ. 89.75 லட்சத்தில்
காசோலைகளை மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் பேசியது:
பெண் கல்வி மற்றும் இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்துவதே திருமண
நிதியுதவி திட்டத்தின் முக்கிய நோக்கம். விழாவில் பயனடைந்த 300 பேரில், 241 பேர்
10, 12-ம் வகுப்பு கல்வி பயின்றவர்களாகவும், 59 பேர் பட்டப் படிப்பு
பயின்றவர்களாகவும் உள்ளனர். இந்த ஒதுக்கீட்டில் பட்டப் படிப்பு பயின்றவர்கள்
குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இதை அதிகப்படுத்தினால், அரியலூர் மாவட்டம் பெண்
கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கருதுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். மேலும், 74
இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பெண் சிசுக்கொலை மற்றும் இளம்
வயது திருமணம் செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களில் தகுதிக்குள்பட்ட பொதுமக்கள்
விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி தங்களது
வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
விழாவில், அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல், மாவட்ட
ஊராட்சித் தலைவர்
தனலட்சுமி, தா.பழூர் ஒன்றியக் குழுத் தலைவர் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.