Enable Javscript for better performance
அனுமதியின்றி மதுபானம் விற்றதாக 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில், அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.

    அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் செந்துறை அரசு மதுபானக்கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த செந்துறை காமராஜ் நகரை சேர்ந்த ஜோதிமுருகன் (27), செந்துறை கே.கே.நகரைச் சேர்ந்த குபேந்திரன் (31), அரியலூர் வண்ணாங்குட்டை அரசு மதுபானக்கடை அருகே மது விற்பனை செய்த அரியலூரைச் சேர்ந்த ஜெயகுமார் (35), அரியலூர் சந்தைப்பேட்டை பகுதியில் மது விற்பனை செய்த அரியலூர் புது மார்க்கெட் தெருவைச் சேர்ந்த துளசிராஜன் (35), மீன்சுருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் மேற்கொண்ட சோதனையில் தேவமங்கலம் பகுதியில் மது விற்பனை செய்த தேவமங்கலம் பிரதான சாலையை சேர்ந்த பஞ்சநாதன் (64) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த19 ஆயிரத்து 380 மில்லி மது பறிமுதல் செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai