சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் விதிமுறைகளை மீறியதாக 127 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    அரியலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரியும் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீஸார் மூலம் நாள்தோறும் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு, சாலை விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 2, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 48, அதிக பாரம் ஏற்றிச் சென்றதாக 4, அதிக பாரம் ஏற்றிச் சென்றதாக 2, அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கியதாக 22, இரு சக்கர வாகனத்தில் மூவர் சென்றது 16, கண் கூசும் முகப்பு விளக்குடன் வாகனத்தை இயக்கியது 4, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியது 1 மற்றும் இதர வாகன வழக்குகள் 28 உள்பட 127 மோட்டார் வாகன சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai