நியாய விலைக் கடைகளில் ஆட்சியர் ஆய்வு
By அரியலூர் | Published on : 14th January 2013 04:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் அருகேயுள்ள எருத்துக்காரன்பட்டி ஊராட்சி, கோவிந்தபுரம் நியாயவிலை கடையில் இலவச பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வரும் பணியினை, மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு பொருள்கள் குறித்தும், பெறாதவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க உத்தரவிட்ட ஆட்சியர், அரியலூர் தெற்கு தெருவில் உள்ள அமராவதி நியாயவிலை கடையை பார்வையிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் கூறியது:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2,14,435 அரிசி குடும்ப அட்டைதாரர்களில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை 2 லட்சத்து 4 ஆயிரத்து 608 குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ. 3 கோடியே 7 லட்சத்து 280 மதிப்புள்ள பொங்கல் பரிசுகள்வழங்கப்பட்டுள்ளது. இது 95.4 சதமாகும். என்றார் ஆட்சியர் ப. செந்தில்குமார்.