சுடச்சுட

  

  ஜயங்கொண்டம் அருகே  பெண்ணை மிரட்டி மூன்றேகால் பவுன் நகைகளை மர்ம நபர்கள் சனிக்கிழமை பறித்துச் சென்றனர். ஜயங்கொண்டம் அருகே உள்ள பிலாகுறிச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி வளர்மதி(38). இவர் பொன்பரப்பி சென்று விட்டு சைக்கிளில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். வீராக்கன் கிராமம் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வளர்மதியை மிரட்டி அவரிடமிருந்து தங்கதாலி, தோடு மற்றும் நகைகளை பறித்துச் சென்றனர். இரும்புலிகுறிச்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai