சுடச்சுட

  

  அரியலூர் அருகே தனியார் பேருந்து மோதியதில், சிமென்ட் ஆலையில் பணிபுரிந்த ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

  அரியலூர் அருகேயுள்ள ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (35). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.  ரெட்டிபாளையத்தில் இருந்து, அரியலூர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அரியலூரில் இருந்து கடம்பூர் சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai