Enable Javscript for better performance
கங்கைகொண்டசோழபுரத்தில் சுற்றுலாப் பொங்கல்- Dinamani

சுடச்சுட

    

    கங்கைகொண்டசோழபுரத்தில் சுற்றுலாப் பொங்கல்

    By  ஜயங்கொண்டம்  |   Published on : 16th January 2013 12:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சமத்துவப் பொங்கல் விழா திஙகள்கிழமை கொண்டாடப்பட்டது.
     அரியலூர் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார் தலைமை வகித்தார்.
     விழாவில் அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் சுற்றுலாப் பயணிகள் விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் நம் நாட்டு பாரம்பரிய உடையான வேட்டி, சேலை உடுத்தி பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
     இங்கு நாட்டுபுறக் கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால்குதிரை, கருப்புசாமி, புச்சைகாளி, பவளகாளி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
     ஜெர்மன், போலந்து, இஸ்ரேல், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 45 சுற்றுலாப் பயணிகள் இதில் பங்கேற்று பொங்கலைக் கொண்டாடி, கலைஞர்களுடன் ஆடி மகிழ்ந்தனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து கெüரவித்து பொங்கலை வழங்கினார். விழாவை முன்னிட்டு சுயஉதவி குழுக்களுக்கு நடைபெற்ற கோலப்போட்டியில் குறிஞ்சி மகளிர் சுய உதவி குழுவினர், அம்மன் மகளிர் சுய உதவி குழுவினர் முதல் இரு இடங்களைப் பெற்றனர்.
     விழாவில் தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் ராஜமூர்த்தி, புதுவாழ்வுத் திட்ட மாவட்டத் திட்ட மேலாளர் பி. சுந்தரேஸ்வரன், உதவித் திட்ட மேலாளர் மரியமதேலம்மாள், கோட்டாட்சியர்கள் கணபதி, கஸ்தூரி, வட்டாட்சியர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபு, சபாநாயகம், துணை ஆணையர்கள் அருளப்பன், சேகர், ஒன்றியக் குழுத் தலைவர் கண்ணகி குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai