சுடச்சுட

    

    வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற அரியலூர் மாவட்ட பார்வையற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ப. செந்தில் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     கையெழுத்துப் போட தெரிந்தவர்கள் முதல், பட்டதாரிகள் வரை இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். பொது வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில் பயன் பெறுபவர்களும், உதவித்தொகை பெற்று மூன்றாண்டுகள் முடிந்தவர்களும் (பத்தாண்டில் எஞ்சிய காலத்துக்கு) உதவித்தொகை பெறலாம்.
     பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு அதற்கு கீழுள்ள கல்வித் தகுதிக்கு மாதம் ரூ. 300, பிளஸ் 2 தகுதிக்கு மாதம் ரூ. 375, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 450 வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். அதாவது, 2011 டிச. 31-ல் அல்லது அதற்கு முன் பதிந்து, தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 2012 டிச. 31-ல் 45 வயதையும், மற்ற வகுப்பினர் 40 வயதைக் கடந்தவராகவும் இருக்கக் கூடாது. எந்த ஒரு நிறுவனத்திலும் சேர்ந்து படிப்பவராக இருக்க கூடாது. ஆனால், தொலைதூர கல்வி படிப்பவராக இருக்கலாம். விண்ணப்பங்கள் காலை 10 முதல் பிற்பகல் 1.30 மணி வரை மட்டுமே பெறப்படும்.
     அசல் கல்விச் சான்றிதழ், வேலைவாய்ப்பக அட்டை, சமூக நலத் துறையால் வழங்கப்பட்டுள்ள மாற்று திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை, ஒரு புகைப்படம், அரியலூர் மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்களது பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று நிறைவு செய்து, பிப். 28- அளித்து உதவித்தொகை பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai