சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்றதாக 12 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

  திருவள்ளுவர் தினமான செவ்வாய்க்கிழமை, அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

  இதில், அரியலூர் அருகேயுள்ள ஓட்டக்கோவில் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்த காலனி தெருவைச் சேர்ந்த அன்பழகன் (32), நானாங்கூர் பகுதியில் மது விற்பனை செய்த மேற்குத் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து உள்ளிட்ட 12 பேரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai