சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 98 மோட்டார் வாகன வழக்குகள்

    By dn  |   Published on : 17th January 2013 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் சாலை விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியது தொடர்பாக 98 மோட்டார் வாகன வழக்குகள் செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டன.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள், நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீஸார் மூலம் நாள்தோறும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு, சாலை விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

    அதேபோல, செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 14, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 36, அதிக பாரம் ஏற்றிச் சென்றதாக 2, அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கியதாக 16, இரு சக்கர வாகனத்தில் மூவர் சென்றதாக 5 மற்றும் இதர வாகன வழக்குகள் 25 என, மாவட்டம் முழுவதும் மொத்தம் 98 மோட்டார் வாகன சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai