Enable Javscript for better performance
தடகளப் போட்டியில் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    தடகளப் போட்டியில் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

    By dn  |   Published on : 17th January 2013 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவிகள், கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனர்.

    தஞ்சாவூர் அன்னை வேளாங்கன்னி கல்லூரியில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான பளு தூக்கும் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

    இதில் பங்கேற்ற அரியலூர் அரசு கலைக் கல்லூரி இளங்கலை இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் பயிலும் மாணவி நிவேதா முதலிடம் பெற்று, தங்கப் பதக்கம் பெற்றார்.

    இதேபோல, தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பங்கேற்ற அரியலூர் அரசு கலைக் கல்லூரி இளங்கலை மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவி சங்கீதா, ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.

    இந்த மாணவிகளை கல்லூரி முதல்வர் சீனிவாசன் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai