Enable Javscript for better performance
பெண்ணை காணவில்லை என புகார்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பெண்ணை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    ஜயங்கொண்டம் அருகே உள்ள ரெட்டிதத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்த அர்ச்சுனன் மகள் சசிகலா (22). இவருக்கும் மீன்சுருட்டி அருகே உள்ள பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜன் மகன் ராஜாவிற்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சசிகலா தனது பெற்றோருடன் வசித்துவந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை சசிகலாவின் தாய் வாசுகி கோவிலுக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்த போது சசிகலாவை காணவில்லையாம்.

    இதுகுறித்து வாசுகி ஆண்டிமடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai