Enable Javscript for better performance
மின்கம்பத்தில் ஆட்டோ மோதி ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் ஆட்டோ மோதியதில் அதன் ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார்.

    ஜயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் குடிக்காடு காலனி தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் நடராஜன் (45). இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி, சொந்த ஊருக்கு திங்கள்கிழமை தனது ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக தத்தனூர் அருகே சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் ஆட்டோ மோதியது.

    இதில் காயமடைந்த நடராஜன் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிரச் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

    புகாரின் பேரில் உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் அன்பழகன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai