சுடச்சுட

  

  அரசு ஊழியர்களுக்கு ஜன. 21-ல் விளையாட்டு போட்டிகள்

  By அரியலூர்  |   Published on : 19th January 2013 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜன. 21-ம் தேதி அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கு  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு பிரிவு  சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜன. 21-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் நடைபெறவுள்ளது. 30 மற்றும் 40 வயதுக்குள்பட்ட  ஆண்களுக்கு தனித்தனியாக 100 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 50 வயதுக்குள்பட்டவர்களுக்கு 80 மீட்டர், 600 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டப் பந்தயம், 200 மீட்டர் நடை, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.

  30 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு 100 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 40 வயதுக்குள்பட்டவர்களுக்கு 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 50 வயதுக்குள்பட்டவர்களுக்கு 50 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 மீட்டர் நடை, குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

  அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தாங்கள் கலந்துகொள்ள விரும்பும் விளையாட்டை தேர்வு செய்து, விளையாட்டுக்கான நுழைவுப் படிவத்தை வயதுச் சான்றுடன், எந்த வயது பிரிவில் கலந்து கொள்கிறார்கள் என்பதையும், அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும். போட்டிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் காவல் துறையினர் தவிர அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். போட்டிகளில் பங்கேற்போர், ஜன. 21-ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai