சுடச்சுட

    

    அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பாகிஸ்தான் கொடியை வெள்ளிக்கிழமை எரிக்க முயற்சித்தனர்.

    பாகிஸ்தான் ராணுவ அத்துமீறலை கண்டித்து, சிதம்பரம் மக்களவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அரியலூர் நீதிமன்ற சாலையில் இருந்து ஊர்வலமாகச் சென்று வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பாகிஸ்தான் கொடியை எரிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவலிங்கசேகர் தலைமையிலான போலீஸார், கொடியை எரிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    தொடர்ந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு சிதம்பரம் மக்களவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வீரமணி தலைமை வகித்தார். துணைத் தலைவர்  சுப. சுந்தரசோழன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஜயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதி தலைவர் ஜாக்சன், துணைத் தலைவர் சரவணன், பொதுச் செயலர்கள் செல்வம், அக்பர் அலி, அரியலூர் தொகுதி பொதுச் செயலர் பாரதி, நிர்வாகிகள் காமராஜ், மகேந்திரன், ஹரிஹரன், ராமதாஸ், பாலசுப்பிரமணியன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி  சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai