சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் துல்லிய பண்ணைய திட்டம் 80 ஹெக்டேர் பரப்பளவில் ரூ. 20 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது என்றார் மாவட்ட  ஆட்சியர் ப. செந்தில்குமார்.

  அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வேளாண்மைத் துறை சார்பில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  ஜயங்கொண்டம் வட்டத்தைச் சேர்ந்த 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 2,340 மதிப்பிலான கைத்தெளிப்பான், தோட்டக்கலைத் துறை சார்பில் திருமானூர் வட்டத்தைச் சேர்ந்த 3 பயனாளிக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் தலா ரூ. 4,500 மதிப்பிலான வேளாண் கருவிகள் ஆகியவற்றை வழங்கி ஆட்சியர்  மேலும் பேசியது:

  அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 27400 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. நிகழாண்டு இதுவரை 17,100 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சிறு தானியங்கள் 16,930 ஹெக்டேர் பரப்பிலும், பயறு வகை  பயிர்கள் 2,700 ஹெக்டேரிலும், பருத்தி 8,100 ஹெக்டேரிலும், கரும்பு 8,015 ஹெக்டேரிலும், எண்ணெய்வித்து 7,400 ஹெக்டரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. துவரை பருவத்துக்கு ஏற்ற ஆடுதுறை 36, 45 ஆகிய விதைகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. கார்த்திகை பட்டத்துக்கு தேவையான எண்ணெய் வித்துகள் 15 டன் வேளாண் விரிவாக்க மையங்களில் தயார் நிலையில் இருப்பு உள்ளது. யூரியா 750 மெ.டன், டி.ஏ.பி 451 மெ.டன், பொட்டாஷ் 400 மெ.டன் மற்றும் கலப்பு  உரங்கள் 405 மெ.டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் விற்பனை மையங்களில் இருப்பு உள்ளது.

  மாவட்டத்தில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி 130 ஹெக்டேர் பரப்பளவில்  இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ. 32.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டிலும், துல்லிய பண்ணையம் 80 ஹெக்டேர் பரப்பளவில் ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீட்டிலும்  செயல்படுத்தப்படவுள்ளது என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. கருப்பசாமி, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ப. சங்கரலிங்கம், துணை இயக்குநர் (தோட்டக்கலைத் துறை) செüந்தர்ராஜன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai