சுடச்சுட

  

  அரியலூரில் கலாசாரப் போட்டிகள் ஜன. 22-ல் தொடக்கம்

  By அரியலூர்  |   Published on : 20th January 2013 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில்  கலாசார விளையாட்டுப் போட்டிகள் ஜன. 22-ம் தேதி முதல் பிப். 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார்  வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு கலாசார விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

  அரியலுர் ஒன்றியத்தில் ஜன. 22, ஆண்டிமடம் ஒன்றியத்தில் 23, ஜயங்கொண்டம் ஒன்றியத்தில் 24, தா.பழூர் ஒன்றியத்தில் 29, செந்துறை ஒன்றியத்தில் 30, திருமானூர் ஒன்றியத்தில் 31-ம் தேதியும், மாவட்ட அளவிலான போட்டிகள் பிப். 7-ம் தேதி அரியலூரிலும் நடைபெற உள்ளன.  இதில் கோலம், ரங்கோலி, எய்ட்ஸ் விழிப்புணர்வு, குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு, கல்வியில் பெண்களின் முன்னேற்றம் குறித்த தலைப்புகளில் பட்டிமன்றமும், சமூக விழிப்புணர்வு கலாசார நாட்டுப்புற பாடல் ஆகியவை குறித்த பாட்டுப் போட்டியும், கலாசாரமிக்க கருத்துகளுடன் கூடிய தெருக்கூத்து மற்றும் நாடகமும் நடைபெற உள்ளது.   ஒன்றிய அளவிலான போட்டி ஒன்றுக்கு முதல் பரிசாக ரூ. 500, இரண்டாம் பரிசாக ரூ. 300, மூன்றாம் பரிசாக ரூ. 200, மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai