சுடச்சுட

    

    அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

    By அரியலூர்  |   Published on : 20th January 2013 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் ப. செந்தில்குமாரிடம் அளிக்கப்பட்ட மனுவில் விவசாயிகள்  தெரிவித்திருப்பது:

    அரியலூர் மாவட்டத்தில் பருவ மழையின்றி கிணற்று நீர் கிடைக்காததாலும், மின் பற்றாக்குறையாலும் விவசாயம் பாதிக்கப்ப்டடுள்ளது.

    எனவே, அரியலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பருத்தி, 40 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளம், 15 ஆயிரம் ஏக்கர் கடலை, 6 ஆயிரம் ஏக்கர் உளுந்து, 4 ஆயிரம் ஏக்கர் சோளம் மற்றும் 6 ஆயிரம் ஏக்கரில் சிறு தானியங்கள் மானாவாரி பயிராக சாகுப்படி செய்யப்பட்டுள்ளது.

    பருவமழை இல்லாததால், பயிர்கள் அனைத்தும் கருகும் நிலையில் உள்ளன. ஒருசில பகுதிகளில் 10 சதவீத மகசூலே கிடைத்துள்ளதால், மானாவாரி பயிர்களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

    தா.பழூர் ஒன்றியத்தில் 9 ஆயிரம் ஏக்கரிலும், திருமானூர் பகுதியில் 20 ஆயிரம் ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா, கடந்த முறை முதல்வராக இருந்த போது புதிய வீராணம் திட்டத்தை தொடங்கிய போது தா.பழூர், திருமானூர் ஒன்றியங்களை டெல்டா பகுதியாக அறிவித்தார்.

    ஆனால், இதுவரை இப்பகுதிகளில் டெல்டா மாவட்டங்களுக்குரிய சலுகைகள் வழங்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் திருத்திய வேளாண் காப்பீடு திட்டம்  அறிவித்து, காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தி, ஏக்கருக்கு காப்பீட்டு தொகையும், பேரிடர் நிதியாக ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரமும் என மொத்தம் ரூ. 13,500 அறிவித்துள்ளது. இதேபோல, தா.பழூர், திருமானூர் பகுதிகளுக்கும் அறிவிக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்து கரும்பு டன்னுக்கு ரூ. 3,500 அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai