Enable Javscript for better performance
இலவச வேட்டி, சேலை வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், சீனிவாசபுரம் ஊராட்சி மேட்டுகுடிசையில் எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி, இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    விழாவிற்கு எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலர் எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஏழை, எளிய பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் இலவச வேட்டி, சேலையை  வழங்கிய அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல் பேசியது:

    திமுக ஆட்சியில் கல்விக்காக ரூ. 4 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரூ. 14 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசப் புத்தகம், பை, ஜாமெண்ட்ரி பாக்ஸ், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உதவித் தொகை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என்றார் அவர்.  நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் கணேசன், முன்னாள் ஊராட்சித் தலைவர் சிவப்பெருமாள், எம்ஜிஆர் இளைஞரணி மாவட்டச் செயலர் சிவசங்கர், வழக்குறைஞர் பிரிவு மாவட்டச் செயலர் வெங்கடாஜலபதி, ஒன்றியக் குழு உறுப்பினர்  சுரேஷ், ஒன்றியச் செயலர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பவானி வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எம்ஜிஆர் இளைஞர் மன்ற மாவட்ட அவைத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai