சுடச்சுட

    

    பட்டதாரி ஆசிரியர்களுக்குஇரண்டு நாள் பயிற்சி

    By அரியலூர்  |   Published on : 20th January 2013 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், புதிதாக பணியேற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி சனிக்கிழமை தொடங்கியது.

    பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வைத்திலிங்கம் தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் மோகன்சஞ்சீவி (அரியலூர்), நாராயணராஜூ (உடையார்பாளையம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பயிற்சி முகாமில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிபாங்கு, ஆசிரியர் நடத்தை விதிகள், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், சமுதாய கணக்கீடுகள், தாயார் ஆசிரியர் கழகம், தமிழக அரசு மற்றும் இதர திட்டங்கள், கட்டட வசதி பராமரிப்பு, குடிநீர், கழிப்பிடம், பள்ளி வளாகம், பள்ளியில் பாகுபாடு இன்மை, சுகாதாரம், முதலுதவி, தமிழக முதல்வரின் 2023 தொலைநோக்கு பார்வையின் 10 அம்சங்கள், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடுகள், கல்வி இணைச் செயல்பாடுகள், அரசாணைப்படி காலை வழிபாடு மற்றும் இதர செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் முத்துரெங்கம், இளங்கோ, மயில்சாமி, எழில்வளவன், விஜயகுமார், மனமலர்செல்வி, ராஜேந்திரன், மயில்வாகனன், ஆனந்தராஜ், காமராஜ் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

    பயிற்சியில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி

    பட்டதாரி ஆசிரியர்கள்

    181 பேர் கலந்து கொண்டனர்.

    தத்தனூர் மெரிட் கல்வியியல் கல்லூரியைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் அந்தோனிசாமி, ஜெயராமன் ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்று பயிற்சி அளித்தனர். உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai