சுடச்சுட

  

  அகில இந்திய பளுதூக்கும் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு பாராட்டு

  By  அரியலூர்  |   Published on : 21st January 2013 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், அகில இந்திய பளுதூக்கும் போட்டியில் பங்கேற்கும் வீராங்கணைகளுக்கு பாராட்டு மற்றும் வழியனுப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
   அகில இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமத்தால் நடத்தப்படும் பெண்களுக்கான பளு தூக்கும் போட்டி மகாராஷ்டிரா மாநிலம், சாங்கிலியில் திங்கள்கிழமை (ஜன. 21) முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது.
   இதில் 17 வயதிற்குள்பட்ட பிரிவில் வேலூர் கோடீஸ்வரி, அகல்யா, நாகர்கோவில் தர்ஷினி, திருச்சி அன்னபூரணி, அரியலூர் சாரதா, பவித்ரா, கலைச்செல்வி ஆகியோரும், 19 வயதிற்குள்பட்ட பிரிவில் நாகர்கோவில் சுகன்யா, தஞ்சாவூர் யோகேஸ்வரி, மகாதேவி, அரியலூர் மேகலா, கனிமொழி, திவ்யபாரதி, பிரியங்கா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த வீராங்கணைகள் கடந்த ஒரு வாரமாக அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்றனர்.
   மாவட்ட பளு தூக்கும் பயிற்றுநர் சதீஷ், துணைப் பயிற்சியாளராக உஞ்ஜினி அரசு உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பி.சம்சு, அணி மேலாளராக கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியை எஸ்.கலையரசி ஆகியோர் மாணவிகளுடன் செல்கின்றனர்.
   மாவட்ட விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு மற்றும் வழியனுப்பு விழாவிற்கு, அரியலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.வைத்திலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், நல்லாசிரியர் வி.யோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு, மெட்ராஸ் சிமெண்ட்ஸ் நிறுவனத்தினர் சார்பில் வழங்கப்பட்ட சீருடைகளை, அரசு மருத்துவர் பி.செல்வப்பிரியா வழங்கினார்.
   மெட்ராஸ் சிமெண்ட்ஸ் துணை பொது மேலாளர் (மனிதவளம்) ஏ.ஜான்சன் விளையாட்டு வீராங்கனைகளை வாழ்த்தி பேசினார்.
   அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.சந்திரன் வரவேற்றார். அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஆர்.ரமேஷ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai