அனுமதியின்றி மது விற்ற 6 பேர் கைது
By அரியலூர் | Published on : 21st January 2013 10:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்டத்தில் அனுமதியின் மதுபானம் விற்றதாக 6 பேரை போலீஸார்
சனிக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 3 ஆயிரத்து 690 மில்லி மதுபானம் பறிமுதல்
செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், சனிக்கிழமை மேற்கொண்ட
சோதனையில் சோழமாதேவியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த கௌசல்யா (63),
காமரசவல்லியில் மது விற்பனை செய்த காமரசவல்லி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த தர்மராஜ்
(38), கதிரவன் (41), சன்னாசிநல்லூரில் மது விற்பனை செய்த காலனி தெருவை சேர்ந்த
ராஜேந்திரன், கீழக்கொளத்தூரில் மது விற்பனை செய்த வடக்கு தெருவை சேர்ந்த
கரும்பாயிரம் (48), கூவத்தூரில் மது விற்பனை செய்த முருகையன் (47) ஆகியோரை கைது
செய்து, அவர்களிடமிருந்து 3 ஆயிரத்து 690 மில்லி மது பறிமுதல் செய்யப்பட்டது.