சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் 4,56,986 வாக்காளர்கள் உள்ளனர்

  By  அரியலூர்  |   Published on : 21st January 2013 10:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் 4,56,986 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் வாக்காளர் பதிவு தேர்தல் ஆணைய பயிற்சி பார்வையாளர் ஸ்வரன்சிங்.
   அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப்பணி தொடர்பாக, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை வகித்த அவர் மேலும் பேசியது:
   அரியலூர் தொகுதியில் 1,14,658 ஆண் வாக்காளர்களும், 114965 பெண் வாக்காளர்களும், ஜயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதியில் 1,14,009 ஆண் வாக்காளர்களும், 1,13,354 பெண் வாக்காளர்களும் என அரியலூர் மாவட்டத்தில் 4,56,986 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணியின்போது, அரியலூர் தொகுதியில் பெயர் சேர்க்க கோரி பெறப்பட்ட 8,419 விண்ணப்பங்களில் 8,261 விண்ணப்பங்களும், ஜயங்கொண்டம் தொகுதியில் பெறப்பட்ட 9,507 விண்ணப்பங்களில் 9,277 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. வாக்காளர் பட்டியலிருந்து பெயரை நீக்க கோரி இரண்டு தொகுதிகளிலும் பெறப்பட்ட 240 விண்ணப்பங்களில் 239 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. மேலும் இறப்பு, குடியிருப்பு மாற்றம் மற்றும் இரட்டை பதிவு போன்ற காரணங்களால் அரியலூர் தொகுதியில் 7,886 வாக்காளர்களும், ஜயங்கொண்டம் தொகுதியில் 5,674 வாக்காளர்களும் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
   புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி விண்ணப்பித்துள்ள 19 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு புகைப்பட அடையாள அட்டையும், 1.1.2013ம் தேதியில் 18 வயது பூர்த்தி அடையவுள்ள நபர்களுக்கு தேசிய வாக்களர் தினமான ஜன. 25ம் தேதி சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றார் அவர்.
   தொடர்ந்து, அரியலூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட இலுப்பையூர் மற்றும் பொட்டவெளி ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் தொடர்பாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் இடமாற்றம் குறித்து வாக்காளர்களிடம் ஆய்வு மேற்கொண்டார் தேர்தல் ஆணைய பயிற்சி பார்வையாளர் ஸ்வரன்சிங்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai