Enable Javscript for better performance
தேளூர் பகுதியில் நாளை மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், தேளூர் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 22) மின் விநியோகம் இருக்காது என்றார் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், அரியலூர் நகர உதவி செயற்பொறியாளர் ராஜமாணிக்கம்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    தேளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் தேளூர், வி.கைகாட்டி, விளாங்குடி, விக்கிரமங்கலம், சுண்டக்குடி, நாகமங்கலம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai