சுடச்சுட

    

    அவதூறு வழக்கு: திமுக பேச்சாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

    By அரியலூர்  |   Published on : 22nd January 2013 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அவதூறு வழக்கு தொடர்பாக அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், திமுக பேச்சாளர் வரகூர் காமராஜ் திங்கள்கிழமை ஆஜரானார்.

      அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகேயுள்ள சன்னாவூரில் கடந்த ஜூன் 24-ல் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் வரகூர் காமராஜ், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினாராம். இதுகுறித்து வழக்குரைஞர் சண்முகம் டிச. 19-ல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

      வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி தங்கராஜ், ஜன. 21-ம் தேதி அவர் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வரகூர் காமராஜ் திங்கள்கிழமை ஆஜரானார். வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி, குற்றப்பத்திரிகையின் நகலை வழங்க உத்தரவிட்டு, வழக்கை பிப். 4-க்கு ஒத்திவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai