சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

  ஆண்டிமடம் அதிமுக ஒன்றியச் செயலர் கே. சிங்காரம் தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றியச் செயலர் டி. பாலு, இளைஞரணிச் செயலர் கே. பாலகிருஷ்ணன், மாணவரணி ஒன்றியச் செயலர் ஆர். மருதமுத்து, இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலர் ஆர். மணிமொழி, ஒன்றியத் துணைச் செயலர்கள் அன்பழகன், சுமதி பாலு, ஒன்றியப் பொருளாளர் இ. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  அதிமுக அரியலூர் மாவட்டச் செயலரும், அரியலூர் தொகுதி எம்எல்ஏவுமான  துரை. மணிவேல், தலைமைக் கழகப் பேச்சாளர் மதுரை டி. ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

  மாவட்ட கழக துணைச் செயலர் தங்க. பிச்சைமுத்து, மாவட்ட இலக்கிய அணிச் செயலர் சோ. சிவசுப்பிரமணியன், மாவட்டக் கழகப் பொருளாளர் கே. அன்பழகன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றியக் குழு உறுப்பினர் ரீடு துரை. செல்வம் வரவேற்றார்.  ஆண்டிமடம் முன்னாள் ஊராட்சித் தலைவர் பி. ஜெயராமன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai