சுடச்சுட

  

  குழந்தைகள் இல்லங்களில் அனுமதியின்றி சிறார்களை தங்க வைத்தால் நடவடிக்கை

  By அரியலூர்  |   Published on : 22nd January 2013 04:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் இல்லங்களில் அனுமதியின்றி சிறார்களைத் தங்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார்.

  இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  அரியலூர் மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத குழந்தைகள் இல்லங்கள் அனைத்தும் இளைஞர் நீதிச் சட்டம் 2000 (பராமரிப்பு, பாதுகாப்பு), திருத்தச் சட்டம் 2006 பிரிவு 34, துணை பிரிவு 3-ன் படி பதிவு செய்யப்பட வேண்டும். குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் சிறுவர், சிறுமிகளை, அரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் குழந்தைகள் நலக் குழு முன் ஆஜர்படுத்தி அனுமதி பெற்ற பின்னரே அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும்.

  குழந்தைகள் நலக் குழு ஆய்வின்போது, இல்லத்தில் அனுமதி பெறாமல் குழந்தைகள் தங்கியிருப்பது கண்டறியப்பட்டால், சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைகளை அடைத்து வைத்துள்ளதாகக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  (குழந்தைகள் நலக் குழுவானது 15, காமராஜர் நகர், செந்துறை சாலை, அரியலூர்- 621 704 என்ற முகவரியில் இயங்கி வருகிறது).

  எனவே, குழந்தைகள் இல்லம் நடத்தும் நிறுவனங்கள் தங்களது குழந்தைகள் இல்லங்களில் பராமரிக்கப்படும் பெற்றோரை இழந்த குழந்தைகளை நேரில் அழைத்து வந்து அனுமதி பெற வேண்டும்.

     ஏற்கனவே 3 அல்லது 6 மாதங்கள் சமூக நலத் துறை மூலம் பதிவு பெற்று இருந்தாலும், உடனடியாக தங்களது பதிவுச் சான்றை புதுபிக்க வேண்டும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai