சுடச்சுட

  

  மூத்த குடிமக்கள், பென்சனர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

  By ஜயங்கொண்டம்  |   Published on : 22nd January 2013 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  உடையார்பாளையம் வட்டத் தலைவர் கோ. சிவசிதம்பரம் தலைமை வகித்தார். கு. கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை சு. துரைராசன் தொடக்கி வைத்துப் பேசினார். பா. காவைரி, வட்டத் துணைச் செயலர் எல்.ஏ. பீட்டர், நீத்தார் நிதி உதவித் திட்டச் செயலர் சி. ராமசாமி, துணைச் செயலர் சி. பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

  ஆர்ப்பாட்டத்தின் ஓய்வு ஊதியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப்படியை 100 ரூபாயிலிருந்து ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவ உதவித்தொகையை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், 58 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு 50 சதம் பேருந்து கட்டணச் சலுகை  என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    முன்னதாக ஜயங்கொண்டம் அண்ணா சிலையிலிருந்து பேரணியாக வந்தனர். 

  பேரணியில் இரா. சிவனநேசன், வி. சின்னசாமி, அரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்டச் செயலர் த. ராமமூர்த்தி வரவேற்றார். வட்டத் துணைத் தலைவர் ப. சாமிக்கண்ணு நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai