சுடச்சுட

  

   அரியலூர் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக 109 வாகன உரிமையாளர்கள் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதியப்பட்டது.

  அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீஸார் மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது  இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

  அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது: அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் அனுமதியின்றி மது விற்ற கல்லங்குறிச்சியில்  அரியலூர் தெற்கு தெருவை சேர்ந்த காசிநாதன் (55), கல்லங்குறிச்சி அரசு மதுக் கடை அருகே மது விற்ற அறிவழகன் (42), ஜயங்கொண்டம்  போலீஸார் மேற்கொண்ட சோதனையில் நானாங்கூரில்  மேற்கு தெருவை சேர்ந்த பேச்சிமுத்து (52), மீன்சுருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் மேற்கொண்ட சோதனையில் கோடாலிகருப்பூர் பிரதான சாலையில்  ராமமூர்த்தி மனைவி ராணி (37), தளவாய் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ஆதனக்குறிச்சியில் தங்கராசு மனைவி வெண்மதி (45) ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3 ஆயிரத்து 60 மில்லி மது பறிமுதல் ஆனது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai