Enable Javscript for better performance
தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா

    By ஜயங்கொண்டம்  |   Published on : 23rd January 2013 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

       சமூக நலத் துறை பாதுகாப்பு அலுவலர் ஜெ. வேலம்மாள் தலைமை வகித்தார். அனைத்து மகளிர் காவல் நிலைய  ஆய்வாளர் ம. சுப்புலட்சுமி, மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலர் ஜெ. செல்வராஜ் ஆகியோர்  பெண் குழந்தைகளுக்கான அரசின் நலத் திட்டங்கள், பாலியல் வன்கொடுமைகள், பெண் சிசுக்கொலை குறித்துப் பேசினர்.   ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் செல்வகுமாரி, சரண்யா, சமுக நல அலுவலர் ஏ. பார்வதி   ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.    பள்ளி உதவித் தலைமை ஆசிரியை ஏ. ஜோஸ்பின்மேரி வரவேற்றார். ஆசிரியை சி. ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai