Enable Javscript for better performance
தொட்டில் குழந்தைத் திட்டத்தில் 6 சிசுக்கள் பராமரிப்பு\\\'- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் 6 குழந்தைகள் மீட்கப்பட்டு, தொண்டு நிறுவனம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன என்றார் மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார்.

      அரியலூர் ஆட்சியரகத்தில் தொட்டில் குழந்தைத் திட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட பெண் குழந்தையை, திருச்சி சாக்க்ஷீடு தொண்டு நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த ஆட்சியர் மேலும் கூறியது:

       அரியலூர் காவல் நிலையம் அருகே கடந்த 9-ம் தேதி பெண் சிசு ஒன்று மீட்கப்பட்டது. அரியலூரில் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட 6-வது சிசுவாகும் இது.

       இனியா எனப் பெயரிடப்பட்ட இக் குழந்தை, திருச்சி சாக்க்ஷீடு தொண்டு நிறுவன கள அலுவலரிடம் பராமரிக்க ஒப்படைக்கப்படுள்ளது. தவிர்க்க முடியாத நிலையில் பெண் குழந்தைகளை வளர்க்க இயலாத நிலை ஏற்பட்டால், தமிழக அரசால் அரியலூர் மாவட்டத்தில் விரிவுபடுத்தப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்கள், முதன்மை ஆரம்பச் சுகாதார மையங்களில் சமூக நலத் துறையால் அமைக்கப்பட்டுள்ள தொட்டில்களில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குழந்தையை விட்டுச் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

       இத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு தொண்டு நிறுவனம் மற்றும் தமிழக அரசு சார்பில் கல்வி, பாதுகாப்புக்குரிய செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் என்றார் ஆட்சியர்.

       நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, திருச்சி சாக்க்ஷீடு தொண்டு நிறுவன கள அலுவலர் ஸ்டெல்லாமேரி, வழக்குரைஞர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai