சுடச்சுட

    

    பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். செயலர் காசி. உத்திராபதி, அமைப்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநில துணைத் தலைவர் மணிகண்டன் பேசியது:நாட்டில் பல்வேறு ஜாதிகள் இருக்கும்போது, 15 சத மக்கள் தொகையைக் கொண்ட உயர் ஜாதியினர் வசம் கல்வி, சொத்து மற்றும் ஆட்சி அதிகாரம் உள்ளது. 85 சத கீழ்த்தட்டு மக்கள் உயர் ஜாதியினரின் நலன்களைப் பாதுகாக்கும் பணியாளர்களாக வைக்கப்பட்டனர்.

    அரசியல் சட்டம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளின் படி பின்தங்கிய மக்களுக்கு அரசுப் பணியில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிட இட ஒதுக்கீடு முறை உருவாக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai