சுடச்சுட

  

  முதல்வர் கோப்பைக்கானபோட்டி : அரியலூரில் 50 பேர் பங்கேற்பு

  By அரியலூர்  |   Published on : 23rd January 2013 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் 50 பேர் பங்கேற்றனர்.

     முதல்வர் கோப்பை 2012- 2013க்கான மேசைப் பந்து, இறகுப் பந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போருக்கு மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

     இதில் இறகுபந்து போட்டியில் 20 ஆண்களும், 9 பெண்களும், மேசைப் பந்து போட்டியில் 9 ஆண்களும், 12 பெண்களும் கலந்து கொண்டனர்.

    இதில் ஒவ்வொரு போட்டிக்கும் தலா 4 ஆண்கள், 4 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இவர்கள் சென்னையில் நடைபெற உள்ள மாநில போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அழைத்து செல்லப்படுவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai