வடுகபாளையத்தில் இன்று மனுநீதி நாள் நிறைவு
By அரியலூர் | Published on : 23rd January 2013 05:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்டம், வடுகபாளையத்தில் புதன்கிழமை (ஜன. 23) சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் நடைபெறுகிறது.
வடுகபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை 11 மணிக்கு நடைபெறும் முகாமிற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அ. கருப்பசாமி தலைமை வகிக்கிறார்.
விழாவில் சம்பந்தப்பட்ட தொகுதி மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், பயனாளிகளுக்கு நிலப்பட்டா, மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் இதில் பங்கேற்றுப் பயன் பெறலாம்.
ஏற்பாடுகளை வருவாய்க் கோட்டாட்சியர் கணபதி, வட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் செய்துள்ளனர்.