சுடச்சுட

    

    அரசு விடுமுறை நாள்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு விடுப்புப் பயன்கள் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

      அரியலூர் நகராட்சி சுகாதாரத் தொழிலாளர்கள் கூட்டம், சங்க அலுவலகத்தில் பொறுப்பாளர் மாரியப்பன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

      துப்புரவுப் தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து செயலர் சுப்பிரமணியன் விளக்கினார். மாவட்டப் பொதுச்செயலர் தண்டபாணி சிறப்புரையாற்றினார்.

      கூட்டத்தில், சுகாதாரத் தொழிலாளர்களுக்கு உரிய சீருடை மற்றும் தையல் கூலி வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டிப்பது. அரசு விடுமுறை நாள்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு விடுப்புப் பயன்களை வழங்க வேண்டும். பணியின் காரணமாக விடுப்பு அளிக்கவில்லையெனில், அதற்கு ஈடாக மாற்று விடுமுறை நாள்களை அளிக்க வேண்டும். அண்மையில் துப்புரவுப் பணிக்கு நியமிக்கப்பட்ட நபர்களில் ஜாதிப் பாகுபாட்டுடன் சிலரை பணிக்கு அனுப்பாமல், ஓட்டுநர் உள்ளிட்ட மாற்றுப் பணிக்கு அனுப்புவதற்கு கண்டனம் தெரிவிப்பது. பணியாளர்கள் அனைவருக்கும் புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை (ஜன. 23) அரியலூர் நகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

       சங்கப் பொறுப்பாளர்கள் ரெங்கராஜ், வெங்கடேசன், பெருமாள், அமிர்தவள்ளி, கிருஷ்ணம்மாள், நல்லுசாமி, கந்தசாமி, சிவகாமி, பச்சாயி, கோபி உள்ளிட்ட சுகாதாரத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai