Enable Javscript for better performance
அரியலூரில் தொழில்துறை வழிகாட்டும் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் தொழில்துறை வழிகாட்டும் கண்காட்சி

    By அரியலூர்  |   Published on : 24th January 2013 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தொழில்துறை வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

    கண்காட்சி, கருத்தரங்கை தொடக்கி வைத்து, கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சிர் ப. செந்தில்குமார் பேசியது:

    படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வில் பங்கேற்கும் வகையில், அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அளவில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டங்களில், பல்வேறு புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதோடு, போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பணியிடத்திற்குத் தேவையான, கல்வித் தகுதியுடையவர்களை தேர்வு செய்ய முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த டிச. 23-ம் தேதி நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 19 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று நடத்திய நேர்காணலில் 87 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த தொழில் முறை வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, இளைஞர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறும் வகையில் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

    இதில், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செ. மணி, பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து உதவிப் பேராசிரியர் இரா. ஸ்டீபன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான அரசு சலுகைகள் குறித்து தாட்கோ மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, சுயத்தொழில் மற்றும் வங்கி கடனுதவி குறித்து மாவட்ட தொழில் மைய உதவிச் செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு குறித்து உதவிப் பேராசிரியர் ராசமூர்த்தி, போட்டித் தேர்வுகள் குறித்து திருச்சி உதவி இயக்குநர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.

    கருத்தரங்கில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செல்வநாயகி வரவேற்றார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மருதமுத்து நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai