சுடச்சுட

  

  எச்.ஐ.வி, எய்ட்ஸ் விழிப்புணர்வு நாட்டுபுற கலை நிகழ்ச்சி தொடக்கம்

  By அரியலூர்  |   Published on : 24th January 2013 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

  விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார் பேசியது:

  அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரியலூர், ஜயங்கொண்டம், உடையார்பாளையம், கடுகூர், திருமானூர், குமிழியம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா.பழூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஜயங்கொண்டம் பாத்திமா மருத்துவமனைகளில் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படுகிறது.

  சுகவாழ்வு மையத்தில் பால்வினை நோய்களுக்கான இலவச மருத்துவ சேவையும், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ஏ.ஆர்.டி கூட்டு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

  இளைப்பாறும் மையம், சமூகநலப் பேணகம், செஞ்சுருள் சங்கம், தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் எச்.ஐ.வியுடன் வாழ்பவர்களை கறைபடுத்துதல் மற்றும் ஒதுக்காமல், அவர்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு, ஆதரவளித்தல் போன்ற பல்வேறு சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் புதன்கிழமை (ஜன. 23) முதல் 50 நாள்களுக்கு ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மி, பொம்மலாட்டம், தெருக்கூத்து,

  வீதி நாடகங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது என்றார்.

  நிகழ்ச்சியில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு மாவட்ட மேற்பார்வையாளர் அருள்குமார் மற்றும் பல்வேறு தெண்டு நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai