சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  கருத்தரங்கிற்கு அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார். உடையார்பாளையம் மாவட்டக் கல்வி அலுவலர் நாராயணராஜு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இதில் ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ந. கோடீஸ்வரன் பேசியது:

  மாணவர்கள் சாலையை கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். சைக்கிளில் செல்லும் மாணவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லவேண்டும்.

  ஓடும் பேருந்தில் ஏறுவதோ இறங்குவதோ கூடாது.

  மாணவர்கள் பேருந்தின் உள்ளே இடம் இருந்தாலும், படியில் நின்று கொண்டு பயணம் செய்வது மிகத் தவறு.

  பேருந்தில் செல்லும் மாணவர்கள் பேருந்து நடத்துனர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

  ஜயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் மா. காமராஜ், போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் ஆ.சி. பொன்னுவேல் ஆகியோர் பேசினர்.

  பள்ளித் தலைமை ஆசிரியர் இளங்கோவன் வரவேற்றார். ஆசிரியர் கண்ணதாசன் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai